search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகவதி அம்மன்"

    • முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் நடந்தது
    • பனை ஓலைகளால் வேயப்பட்ட 23 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், பின்னர் அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சியும் நடந்தது.

    கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அம்மன் வாகனம் வரும்போது அங்குள்ள முத்தாரம்மன் கோவில் முன்பு வைத்து வாகனத்தில் எழுந்தருளி இருந்த பகவதி அம்ம னுக்கும், முத்தாரம்மனுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்ட னர்.

    அதன்பிறகு 10.30 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட 23 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நள்ளிரவு 11.30 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், திருக்கார்த்திகை மண்ட கப்படி கட்டளைதாரர்கள் பாலன், மோகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • 26-ந்தேதி நடக்கிறது
    • சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது.

    காலை 11 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு கோவில் மேல்சாந்தி மேளதாளத்துடன் தனிப்படகில் சென்று விவேகானந்தர் பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 9 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட 100 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. 10 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    • கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம், 66 அடிநீளம், 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டு வதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது
    • ராஜ கோபுரத்தின் உயரத்தை 120அடியில் இருந்து 150 அடியாஉயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் :கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலி ல் ராஜ கோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம், 66 அடிநீளம், 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டு வதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது. இதே போல கோவிலின் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் அமைய இருக்கும் இடத்திலும் நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது.

    இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் தலைமை ஸ்தபதியும், மகாபலிபுரம் அரசு சிறப்பு கலைக் கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமை யிலான வல்லுனர் குழுவினர்கடந்த சில நாட்களுக்குமுன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லில் ராஜகோ புரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் அமைய இருக்கும் ராஜகோபுரத்தின் அளவை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ராஜ கோபுரத்தின் உயரத்தை 120அடியில் இருந்து 150 அடியாஉயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த ராஜ கோபுரத்தை9நிலை யில் இருந்து 11நிலையாக மாற்ற வும் பரிசீலனை செய்யப் பட்டுவருகிறது. இந்தராஜ கோபுரம்ரூ.15 கோடி முதல்ரூ.20கோடிமதிப் பீட்டில்அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து இந்த புதிய ராஜகோபுரத்துக்கான அளவீடுகளை மறு ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணி இன்று காலை நடந்தது.

    தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற கட்டி டக்கலை நிபுணர் அக்சயா பால கிருஷ்ணன் தலைமை யிலான கட்டிடக்கலை வல்லுநர்கள் குழு இன்று காலை பகவதி அம்மன் கோவிலில் வடக்கு வாசல் மற்றும் கிழக்கு வாசலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடங்களை பார்வையிட்டு ராஜகோபரத்துக்கான இறுதிக்கட்ட அளவீடு செய்து வரைபடத்துக்கான ஆவணப்படுத்தும் பணியை மேற்கொண்ட னர்.

    இந்த ஆய்வின் போது குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், குமரி மாவட்ட திருக்கோ வில்களின் மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், மண்டல ஸ்தபதி செந்தில், சர்வேயர் அய்யப்பன், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 17-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது
    • இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப் பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கேரளா வில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலா னவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை வழிபடுவது வழக்கம். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரி சலை தவிர்க்க கோவி லின் நடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க குமரி மாவட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 17-ந்தேதி முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.

    இந்த தகவலை குமரி மாவட்ட திருக்கோவில் களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், இணை ஆணை யர் ரத்தினவேல் பாண்டி யன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு
    • ரூ.3 கோடி செலவில் திருமண மண்டபம் கோவில் நிதியில் இருந்து கட்ட அனுமதி கேட்பது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு கூட்டம் சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோ வில் களின் தலைமை அலுவ லகத்தில் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில், மருங்கூர் திருமலை முருகன் கோவில் உள்ளிட்ட சில முக்கிய கோவில்களில் பல ஆண்டு காலமாக திருவிழா காலங்களில் பயன்படுத்தப் படாமல் இருப்பு பெட்ட கத்தில் வைக்கப்பட்டு உள்ள தங்க, வைர நகைகளை திருவிழா காலங்களில் மீண்டும் சுவாமிகளுக்கு அணி விப்பதற்கு உரிய அனுமதி பெறுவது.

    போதிய வருமானம் இன்றி குறைவான உண்டி யல்கள் இருக்கும் கோவில் களுக்கு கூடுதலாக அன்னதான உண்டியல்கள் வைக்க அனுமதி கேட்பது. திருக்கோ வில்களுக்கு சொந்தமான காலி இடங்களில் புதிதாக வணிக வளாகங்கள் கட்ட அனுமதி கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. வேளிமலை முருகன் கோவிலில் ரூ.3 கோடி செலவில் திருமண மண்டபம் கோவில் நிதியில் இருந்து கட்ட அனுமதி கேட்பது என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது.
    • உண்டியல் மூலம் ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்து 347 ரொக்க பணம் வசூலாகி உள்ளது.

    கன்னியாகுமரி, நவ.7-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும் நேற்று திறந்து எண்ணப் பட்டன. குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்கா ணிப்பாளரும், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் அதிகாரிகள் முன்னி லையில் நேற்று திறந்து எண்ணப் பட்டது.

    இந்த உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது. மாலை 3 மணி வரை நடந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த வெளிமாநில சுற்றுலா பயணிகளும் குமரி மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பணியாளர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் ஈடுபட்டனர்.

    இதில் உண்டியல் மூலம் ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்து 347 ரொக்க பணம் வசூலாகி உள்ளது. இது தவிர 3 கிராம் 400 மில்லி கிராம் தங்கமும், 12 கிராம் 200 மில்லி கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகி இருந்தது.

    • பணம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்கள் குவிந்தன
    • உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறு வதற்காக வேண்டி கோவி லில் உள்ள உண்டியலில் பணம், காசு, தங்கம், வெள்ளி மற்றும் வெளி நாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்து வது வழக்கம்.

    இதற்காக இந்த கோவிலின் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ள அன்னதான உண்டியல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. ஆனால் இதில் நிரந்தர உண்டியல்கள் கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி திறந்து எண்ணப் பட்டது. அதன்பி றகு கடந்த 40 நாட்களாக திறந்து எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 40 நாட்களுக்கு பிறகு கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும் இன்று காலை திறந்து எண்ணப்ப ட்டன. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் உள்ளிட்டோர் முன்னிலையில் உண்டி யல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
    • நல்லெண்ணெயில் தீபம் ஏற்றுவதற்கு பதிலாக நெய் தீபம் விளக்கு ஏற்றி வழி பாடு நடத்த வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜ கோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்த்த போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள அம்மனின் விக்ரகம் முன்பு தினமும் நல்லெண்ணெயில் தீபம் ஏற்றுவதற்கு பதிலாக நெய் தீபம் விளக்கு ஏற்றி வழி பாடு நடத்த வேண்டும் என்றும் அருள்வாக்கு கூறப்பட்டது.

    அதன்படி மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள அம்மனின் விக்ரகம் முன்பு தினமும் நெய் தீப விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தும் முறை தொடங்கப் பட்டுள்ளது. இதனை குமரி மாவட்ட திருக்கோவில்க ளின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 9 நிலையில் இருந்து 11 நிலையாக மாற்றி அமைக்கப்படுகிறது.
    • இதைத்தொடர்ந்து இந்த புதிய ராஜகோபுரத்துக்கான மறு அளவீடு செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்றுபோன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலில் உள்ள கொலுமண்டபத்தில் நடந்தது.

    இதில் கேரளாவை சேர்ந்த 4 நம்பூதிரிகள் கலந்துகொண்டு தேவபிரசன்னம் பார்த்தனர். அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டவேண்டும் என்றும், அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் 24-வது சக்தி பீடத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திவிட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும், சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும், தேவபிரசன்னத்தில் அருள்வாக்கு கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை கட்டிய ஸ்தபதியின் மகன் ஆனந்த்ஸ்தபதி மற்றும் தொல்லியல் துறையினருக்கும் இந்துசமய அறநிலையத்துறை வடிவமைப்பு பொறியாளர் முத்துசாமி தலைமையிலான வல்லுனர் குழுவினரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடக்க வேண்டி கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்தப்பட்டது. தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது போன்று கோவில் தென்மேற்கு மூலையான கன்னி மூலையில் கோவிலின் தல விருச்சமான சந்தன மரமும் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம் 66 அடிநீளம் 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது. இதேபோல கோவிலின் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் அமைய இருக்கும் இடத்திலும் நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது. இந்த நில அளவீடு செய்யும் பணியை இந்துஅறநிலையத்துறை மண்டல ஸ்தபதி செந்தில், ஸ்ரீரங்கம் ஸ்தபதி இளையராஜா ஆகியோர் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியும் மகாபலிபுரம் அரசு சிறப்பு கலைக்கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமையிலான வல்லுனர் குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இந்த இறுதி கட்ட ஆய்வு பணிகள் நடந்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அமைய இருக்கும் ராஜகோபுரத்தின் அளவை மாற்ற திட்ட மிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ராஜகோபுரத்தின் உயரத்தை 120 அடியில் இருந்து 150 அடியாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ராஜகோபுரத்தை 9 நிலையில் இருந்து 11 நிலையாக மாற்றவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ராஜகோபுரம் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இதைத்தொ டர்ந்து இந்த புதிய ராஜகோபுரத்துக்கான மறு அளவீடு செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டார்
    • சபரிமலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக நடைபெறுகிறது

    கன்னியாகுமரி, நவ.2-

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணி கள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னி யாகுமரிக்கு சுற்றுலா பயணி கள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும்.

    இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடு முறை என்பதாலும், கிறிஸ்து மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட் டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும். இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை யொட்டியும் சுற்றுலா பயணி கள் மற்றும் அய்யப்ப பக்தர் கள் கூட்டம் அலைமோதும்.

    எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியில் சீசன் களை கட்டும். கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சபரிமலை சீசனையொட்டி கன்னியா குமரி பகவதி அம்மன் கோவி லில் தினமும் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர் களுக்கு வசதியாக திருக்கோ வில் நிர்வாகம் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் பக்தர்கள் வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்வதற்கு வசதி யாக "கியூ செட்" அமைந்து உள்ள பகுதியில் சிமெண்ட் தரைத்தளம் அமைக்கும் பணி, மின்விளக்கு வசதி மேல் கூரை சீரமைக்கும் பணி போன்ற பணிகள் நடை பெற்றுள்ளன. கோவிலின் வெளிப்பிரகா ரத்தில் உள்ள நடைபாதை குண்டும், குழியுமாக கிடந்தது. பிரகார நடைபாதையில் சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப் பட்டு சீரமைக்கப் பட்டுள்ளது. கோவிலின் கிழக்கு வாசல் பகுதியும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலை யில் வருகிற 17-ந்தேதி சபரி மலை சீசன் தொடங்குகிறது.

    இந்த சீசனையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வருவார்கள். இதைத்தொ டர்ந்து பக்தர்களுக்கு வசதி யாக கோவிலில் நடை திறக்கும் நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்க திருக்கோவில் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. மேலும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் அய்யப்ப பக்தர்களுக்கு பிரசாதமாக விற்பனை செய்யப்பட்டு வரும் லட்டு, அரவணை, முறுக்கு, பஞ்சா மிர்தம், அதிரசம் போன்ற பிரசா தங்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த சபரிமலை சீசனையொட்டி 1 லட்சம் லட்டு தயாரிக்கும் பணியும் இப்போதே தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார். ஆய்வின் போது நாகர் கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப் பாளரும், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த உள்பட பலர் உடனிருந்தனர்.

    • 17 நிரந்தர உண்டியல்களும் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    • உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்ட னர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் திருக்கோவில் நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அக்டோபர் மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று மாலை திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பொரு ளாளர் கண்ணதாசன், கணக்கர் முருகையா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்ட னர்.

    இதில் காணிக்கையாக ரூ.1 லட்சத்து ஆயிரத்து 444 வசூல் ஆகி இருந்தது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்து வதற்காக கோவில் வளா கத்தில் வைக்கப்பட்டு உள்ள 17 நிரந்தர உண்டியல்களும் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
    • மேலாளர் ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துஇருந்தனர்.

    கன்னியாகுமரி :

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பவுர்ணமி விழா கொண்டா டப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான ஐப்பசி பவுர்ணமி விழா கோலா கலமாக கொண்டா டப்பட்டது.

    இதையொட்டி அதி காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையையும், நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய், பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தங்கக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பவுர்ணமி அன்று சந்திர கிரகணம் நிகழ்ந்ததால் அன்று இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டுவிட்டது. அதைத்தொடர்ந்து அன்று இரவு நடக்க இருந்த மலர்முழுக்கு விழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, மல்லிகை, அரளி, கொழுந்து, துளசி, தாமரை, மரிக்கொழுந்து உள்பட பலவகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபி ஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருள செய்து கோவி லின் உள் பிர காரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்கா வலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதிஷ்குமார், துளசிதரன் நாயர், சுந்தரி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துஇருந்தனர்.

    ×